இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை தீர்வுக்கு மனித குலத்திற்கு ஏற்ற தத்துவ ஞானம் சார்ந்த அணுகுமுறை தேவை – இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு புதிதாக ஆயிரம் தொழில்வாய்ப்பு

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மனித குலத்திற்கு ஏற்ற தத்துவ ஞானம் சார்ந்த அணுகு முறை தேவை என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இஸ்ரேலில் விவசாயத்தறையில் இலங்கையர்களுக்கு புதிதாக ஆயிரம் தொழில்வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.தற்போது இங்கு நிலவும் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு இந்த தொழில் வாய்ப்புகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மனுஷநாணயக்கார குறிப்பிட்டார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிடுமாறு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
உலகை வழிநடத்தும் சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல நிறுவனங்கள், புத்திஜீவிகள் மற்றும் மதங்கள் இந்த இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. இது ஒருபுறம் சமூக-கலாச்சார நெருக்கடியாகவும் ,மறுபுறம் அரசியல்-பொருளாதார நெருக்கடியாகவும் இன்று மாறியுள்ளது.
நம்மில் சிலர் போர் வந்தால் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் இதற்குள் என்ன நடக்கிறது? இஸ்ரேலின் வங்கிகள் உலகின் தங்க சந்தையில் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. மேலும் தங்கத்தின் விலை எதிர்பார்க்காதவகையில் அதிகரித்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விடயத்தில் அமெரிக்கா தலையிட்டால் என்ன நடக்கும்? டொலரின் மதிப்பு மேலும் அதிகரிக்கும். இதில் ஈரான் ஈடுபட்டால் என்ன நடக்கும என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டால் எமது நாட்டின் நிலை என்ன?
எமது நாட்டின் தேயிலைக்கு இங்கு பாரிய சந்தை வாய்ப்பு உண்டு. இதனை நாம் இழக்க நேரிடும். நேரடியாக காணக்கூடிய இம்மாதிரியான விடயங்களுடன் பல மறைமுகமான சிக்கல்களையும் நாம் சந்திக்கும் நிலை உண்டு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாம் தற்போது தான் ஒரு நாடு என்ற ரீதியில் பொருளாதார சிக்கலில் இருந்து மூச்சு விட முயற்சித்தோம். உலகின் பல பகுதிகளில், எல்லைகள் குறிக்கப்பட்டு, ஒரு தேசம் மற்றொரு தேசத்திற்கு எதிராக செயல்படுகின்றன. மதம், கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம் என பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தங்களின் படி இதனை குணப்படுத்த முடியாத நோயாக இன்று மாறிவிட்டது.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மனித குலத்திற்கு ஏற்ற தத்துவ ஞானம் சார்ந்த அணுகுமுறை தேவை. இதற்கு அமைவாக உலக நிலத்தில் எல்லைகளோ வரையறைகளோ இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். நான் ஏற்கனவே பாராளுமன்றத்தில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளேன்.
நாம் ஒரு நாகரீகத்தின் முடிவில் இருக்கிறோம்.இது ஒரு போரில் தான் முடியப் போகிறதா என்ற கடுமையான சந்தேகத்துடன் இதனை நாங்கள் உணர்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் எவருக்கும் பக்கபலமாக இருக்க வேண்டிய தேவையில்லை. நாம் இவ்வேளையில் மனித நேயத்தைத்தான் வலியுறுத்த வேண்டும். மதம், ஜாதி, அரசியல் தத்துவம் எதுவாக இருந்தாலும் மனித நேயத்தின் பெயரால் அவர்களை சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வேறுபாடுகளுடன் பன்முகத்தன்மையைப் பாராட்டவும் மதிக்கவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும். அண்மைக்கால வரலாற்றில், இலங்கையில் ஏற்பட்ட சில நெருக்கடிகளையும், உலகில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளையும் இணைக்க சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த நேரத்தில் நாம் எந்தப் பிரிவையும் சேர்ந்தவர்கள் அல்ல என்ற சிந்தனையுடன் அமைதியான சகவாழ்வில் உலகைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செயல் படாவிட்டால் நம் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. இந்தப் போர் நீடித்தால் உலகப் பொருளாதாரம் மட்டுமல்லாது இலங்கைப் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். மேலும், எங்களின் வருமானங்கள் மட்டுப்படுத்தப்பட்டதால், எங்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் பல பொருட்களுக்காக வேறு வழியின்றி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு, இஸ்ரேலை போன்றே, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் பங்களிப்பும் முக்கியமானது. இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.
அரசாங்கம் என்ற ரீதியில் இந்த மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கான பாரிய பொறுப்பு எமக்கு உண்டு. இந்தப் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு ஊழியரும் நாடு திரும்ப விரும்பினால், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துக்கொடுக்க சமகால அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயாராகவுள்ளளோம் என்றார் அமைச்சர்.
இலங்கையில் இந்த விடயங்களை சமூக ஊடகங்கள் கையாளும் முறையை நாடு என்ற ரீதியில் நாம் சிந்திக்க வேண்டும். அனைவரும் ஒரு பக்கச்சார்பாகவே அறிக்கையிடுகின்றனர் இது இலங்கையில் மீண்டும் இனவாத நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்விடயத்தில் மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது, நாட்டுக்குத் தேவையான எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் வெளி நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இத்துடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர் இருக்கின்றனர். நம்பிக்கை ஏமாற்றமாக மாறிவிடுமா என்பதில் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
இதற்கிடையில், இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக செல்லும் பெண்கள் பிடிபடுகிறார்கள். இவை பற்றிப் பேசியுள்ளோம். ஆள் கடத்தல் பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். இவற்றைப் பற்றிப் குறிப்பிடும் போது பேராசிரியர்கள் போன்றோர் பலவற்றை சொல்லத் தொடங்கினர்கள் என்றும் அமைச்சர் மனுஷணயக்கார மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன