இஸ்ரேலில் சட்ட விரோதமாக பணி புரியும் ஊழியர்களுக்கு தூதுவரின் தலையீட்டுடன் விசா?

யுத்த மோதல் காரணமாக இஸ்ரேலில் உயிரிழந்த பெண் பராமரிப்பு பணியாளர் திருமதி அனுலா ரத்நாயக்காவின் பூத உடலுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இன்று பிற்பகல் எரியவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்
மறைக்த அனுலா வீரசிங்க தனது கடமைகளை உரிய முறையில் மேற்கொண்டவர். நான் இன்று அனுலாவின் உறவினர்களுக்கு சமகால அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பாக அனுதாபங்களை தெரிவித்துள்ளேன். அனுலாவுக்கு வழங்க வேண்டிய அனைத்து இழப்பீடுகளும் வழங்கப்படும். இஸ்ரேலில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு இருப்பது ஆபத்தானது எனக்கருதியனால் அவ்வாறானவர்களை அங்கிருந்து நாட்டிற்கு அழைத்துவர தயாராகவுள்ளோம. இருப்பினும் , இதுவரை எவரும் அங்கிருந்து திரும்பி வருவதற்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றார்.
போர் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துவருகின்றன.ஆனால் இஸ்ரேலில் மட்டுமல்ல, அந்நாட்டுக்கு அருகாமையில் உள்ள நாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் கூட போரினால் ஏதேனும் அனர்த நிலை ஏற்பட்டால், அவர்களையும் நாங்கள் நாட்டுக்கு அழைத்து வர ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம்.
நாம் பாலஸ்தீனத்திற்கு சார்பாகவோ ,இஸ்ரேலிற்கு சார்பாகவோ செயல்பட வில்லை. இதற்கமைவாக நமது நாடு இந்த விடயத்தில் நடுநிலை கொள்கையுடன் செயல் படுகிறது. நாம் யுத்தத்தை விரும்பவில்லை.
தற்போது இஸ்ரேலில் விசா இல்லாமல் இருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை நான் அங்கீகரிக்க மாட்டேன் .அந்தச் செய்தி ஊடகங்களில் இடம்பெறுவதை அவதானித்துள்ளேன். இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு விசா வழங்குவது சட்ட விரோதமான செயலாகும். நாம் இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளோம். சட்ட விரோதமாக பணி புரியும் ஊழியர்களுக்கு அந்நாட்டு தூதுவரின் தலையீட்டுடன் விசா வழங்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன