இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீலாதுன் நபி தினத்தை கொண்டாடுகிறார்கள் 

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று மீலாதுன் நபி தினத்தை கொண்டாடுகிறார்கள்.  நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை இது குறிக்கிறது. கி.பி 571ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம்  பிறை 12ல் மக்கா நகரில் பிறந்த நபிகளாருக்கு 40 ஆவது வயதில் நபிப் பட்டம் வழங்கப்பட்டது. நபிகள் நாயகம் அறிமுகம் செய்த சமூக பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் இன்று வரை பாராட்டப்படுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதேவேளை மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்   “இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து மனிதகுலத்திற்கும் அன்பு மற்றும் அமைதியின் செய்தியைப் பரப்பிய இஸ்லாத்தின் தூதரான முஹம்மது நபி அவர்கள், அல்லாஹ்வின் கடைசி இறைத் தூதராவார்.

அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் முகங்கொடுத்த கடினமான அனுபவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட தருணத்திலும் பொறுமையும் மௌனமும் தான் அவரின் கூரிய ஆயுதங்களாக இருந்தன. நம்பிக்கை மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக, அவர் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன