இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ரஸீர் அஹமட் தெரிவு     

இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ரஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (மே 10) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத்  பின் நஸார் பின் அல்கஹ்தானி (Khalid bin Hamoud bin Nasser Al – Qahtani) இந்நிகழ்வில் விசேட வருந்தினாராக கலந்துகொண்டிருந்ததுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.

அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜே.சி. அலவதுவல, கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரிஷாட் பதியுதீன் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். மேலும், கௌரவ இஷாக் ரஹ்மான் மற்றும் கௌரவ விஜித ஹேரத் ஆகியோர் முறையாக உதவிச் செயலாளராகவும், பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இந்நாட்டின் நீர், வலுசக்தி, சுகாதாரம், நெடுஞ்சாலைகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் பல்வேறு 15 வேலைத்திட்டங்களுக்கு 425 மில்லியன் டொலர் அபிவிருத்திக் கடன்கள் வழங்கியுள்ளமை தொடர்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகத் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த, புதிய தலைவர் சுற்றாடல் அமைச்சர் கௌரவ நஸீர் அஹமட் குறிப்பிடுகையில், இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த தன நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன