இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்

வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 11.30 மணியளவில், விசாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்கே 470 கிலோ மீட்டர் நிலைக் கொண்டிருந்தது. அது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 19 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.