இலங்கை அணி வெற்றி

2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் 19ஆவது போட்டியில்  இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியாவின் Lucknow, யில் நேற்று  (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நெதர்லாந்து அணியை இலங்கை அணி எதிர்கொண்டது.

நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்த அணி  49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஒட்டங்களை பெற்றது.

263 ஒட்ட வெற்றி இலக்கோடு களம் இறங்கிய  இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி  பெற்றது.

இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்ரம 91 ஓட்டங்களையும், பெத்தும் நிஷாங்க 54 ஓட்டங்களையும் பெற்று  இலங்கை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். 2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் முதலாவது வெற்றி இதுவாகும்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன