இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜக்கிய  சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேராவினால் தாம் தாக்கப்பட்டதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் இராஜாங்க அமைச்சர் முறையிட்டிருப்பதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் இவர்கள்  மூவருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.அதன் பின்னர், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்து சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். பின்னர், ராஜாங்க அமைச்சர்  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியேறியதாக தகவல் தெரியவந்துள்ளது

.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன