இமாச்சலபிரதேசம் உத்தரகாண்ட் மாநிலங்களில் கன மழை

இந்தியாவின் இமாச்சலபிரதேசம் ,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை பலர் உயிரிழந்தனர்.

இதன் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகவெடிப்பு காரணமாக இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடும் மழை பெய்துவருகிறது.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம் சிம்லாவில் அடுத்து அடுத்து ஏற்பட்ட நிலசரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பலர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பத்ரிநாத்இ கேதர்நாத் ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதனால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக கங்கை. யமுனை போன்ற ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது..

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன