இந்திய மாநிலமான குஜராத்தில் பிபர்ஜாய் புயல்

இந்திய மாநிலமான குஜராத்தில் பிபர்ஜாய் புயல் இன்று (வியாழக்கிழமை) மாலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11 ஆம் திகதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.

குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த அதிதீவிர புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே இன்று (வியாழக்கிழமை) மாலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் அதிதீவிர புயலாக உருவாகியுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன