இந்திய பிரதமர் மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி – டி.ஆர்.பாலு எம்.பி விளக்கம்

இந்திய பிரதமர் மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நாங்கள் தோற்றுப்போவோம் என்று தெரியும். இருந்தாலும் பிரதமரை அவைக்கு வரவைக்க வேறு வழியில்லை என்றுதான் அதை கொண்டுவந்தோம் என்று நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.
பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்ததே எங்களுக்கு வெற்றிதான் என்றும் அவர் கூறினார்
நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தில்லியில் நேற்று ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய பிரதமர் 2 மணிநேரமாக அதைப்பற்றி பேசவில்லை. அவர் மணிப்பூர், அரியானா சம்பவங்கள் பற்றி கவலைப்படவே இல்லை.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன