இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி மழை குறுக்கிட்டதினால் ரத்து

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது போட்டி மழை குறுக்கிட்டதினால் போட்டி  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 48.5 ஓவர்களில் 266 ஓட்டங்களை எடுத்தது.  முன்னணி வீரர்கள் பலர் விரைவில் ஆட்டமிழந்தனர். களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பான்டியா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இஷான் கிஷன் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ஓட்டங்களும் , ஹர்திக் பான்டியா 87 ஓட்டங்களையும்  குவித்து அசத்தினர்.

பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் , ஹாரிஸ் ரவுப் 3 விக்கெடடுகளையும் , நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதையடுத்து, 267 ஓட்டங்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன