ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்திய அணி

சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.இந்த நிலையில் கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் மகளிர் கிரிக்கெட் காலிறுதி போட்டி நேற்று(21) நடைபெற்றது. இதில் இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஸ்மிருதி மந்தனா தலைமையில் அணி களத்தில் இறங்கியது. மழை காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தது. மந்தனா 27 ஓட்டங்களும், ஷபாலி 67 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் எடுத்தது. ஜெமிமா (47), ரிச்சா (21) இருவரும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 15 ஓவரில் 177 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மலேசியா களத்தில் இறங்கியது. 2 பந்துகளில் 1 ஓட்டம் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. ஐ.சி.சி. தரவரிசைப்படி ஆசிய அளவில் இந்திய மகளிர் அணி முதலிடத்தில் உள்ளதால் அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன