அஹுங்கல்ல உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்ல, உரகஹா வீதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் (27) தந்தை (32) மற்றும் 4 மாதக் குழந்தை காயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்தச் சம்பவத்தை இவர்கள் எதிர்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தமது வர்த்தக நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது கல்வேஹெர என்ற இடத்தில் மறைந்திருந்த ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து தெரிய வந்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன