அஸ்வசும நலன்புரி உதவித் திட்டம்: ஒரு லட்சம் மேல்முறையீடுகள்

 அஸ்வசும நலன்புரி உதவித் திட்டத்தின் பயனாளிகளின் ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகள் மீதான பரிசீலனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சுமார் ஒரு லட்சம் மேல்முறையீடுகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. அதன்படி, ஆறாயிரம் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக அஸ்வசும நலப்புரி சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் நிர்வாக சபை உறுப்பினர் கமல் பத்மசிறி, பிரதேச செயலகங்களின் ஊடாக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் இது தொடர்பில் ஆராயும் என தெரிவித்தார்.

பயனாளிகளைத் தெரிவு செய்யும் போது மக்கள் தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் வறுமைக் கோடும் கருத்தில் கொள்ளப்படும் என்று நிர்வாக சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்தார். 

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன