அம்பாறை மாவட்டத்தில் இலவச யூரியா உரம்

அம்பாறை மாவட்டத்தில் 2023 சிறு போக நெற் செய்கைக்கான இலவச யூரியா உர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ,பாலமுனை கமநல சேவை மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

அரை ஹெக்டெயருக்கு 50 கிலோ கிராம் யூரியா உரம் விநியோகிக்கப்படுவதாக   அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் தத்தமது விவசாய அமைப்புகளினூடாக யூரியா உரத்தினை பெற்றுக் கொள்ளுமாறு பாலமுனை கமநல சேவை மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அஷ்ரப் தெரிவித்துள்ளார்

சிறு போக  நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு யூரியா உர நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் பாலமுனை கமநல சேவை மத்திய நிலைய பிரிவுக்குட்பட்ட ஒலுவில், தீகவாபி மற்றும் பாலமுனை விவசாயிகளுக்கு இலவச யூரியா உரம் வழங்கும் நிகழ்வு  இன்று (19) பாலமுனை உர களஞ்சிய சாலையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய கமத்தொழில் அமைச்சினால் ஐரோப்பிய ஒன்றிய நிதியில் நாடுதழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச யூரியா உர விநியோகம் அம்பாறை மாவட்டத்தில் சகல கமநல மத்திய நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டுவருகிறது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன