அதிஷ்ட இலாப சீட்டு ரூபா 40 ஆக அதிகரிப்பு

தற்போது நாட்டில் விற்பனை செய்யப்புடும் அதிஷ்ட இலாப சீட்டின் விலை ரூபா 40 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

தேசிய லொத்தர் சபை இதுதொடர்பாக தெரிவிக்கையில் இந்த விலை அதிகரிப்புக்கு திறைசேரி அங்கீகாரம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது.இதற்கு அமைவாக அதிஷ்ட இலாப சீட்டு ஒன்றின் விலை 40 ரூபாவாக அமையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் காரணமாக, பணத்தை அச்சிட முடியாது எனவும், எனவே அரசாங்கத்தின் செலவுகளை ஈடுசெய்யும் பொறுப்பு தனது நிறுவனம் மற்றும் ஏனைய ஐந்து நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாகவும்  அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எனவே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன