அதிகாரிகள் சரியான தகவல்களை வழங்காதபோது பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது

சில அரச அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவில் சமர்ப்பித்த  அறிக்கையை, சில மாதங்களின் பின்னர் மீண்டும்  அதே அறிக்கையை  சமர்ப்பிக்கிறார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் எவ்வித புரிதலும் இல்லாத மற்றும் பொறுப்பேற்க முடியாத மற்றுமொரு அதிகாரிகள் குழு கூட்டங்களில் பங்கேற்க வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதிகாரிகள் சரியான தகவல்களை வழங்காதபோது, பிரச்சினைகளை தீர்த்து வேலை செய்வது கடினமாகும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (24) இடம்பெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.  இது கம்பஹா மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:

டெங்குவை கட்டுப்படுத்துவதே உள்ளூராட்சி நிர்வாகத்தின் முக்கிய பணி. அதற்கு உங்கள் திட்டங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரிடம் கொடுங்கள். அப்போது பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

குறிப்பாக தமது கடமைகளில் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதாக பலர் என்னிடம் தெரிவித்தனர். சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கு வரம்பு இல்லை. திட்டங்களை கொடுத்தால், அந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும். மேலும், டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளை, வேறு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.

சில அரச அதிகாரிகள் முந்தைய ஒருங்கிணைப்புக் குழுவிடம் அளித்த அறிக்கையையே தற்போதும் சமர்ப்பித்து வருகின்றனர். எங்களுக்கு முறையான அறிக்கைகளை கொடுங்கள். அப்போது பிரச்சினைகளை தீர்த்து வேலை செய்யலாம்.

டெங்கு கட்டுப்பாட்டு பணியை தனியாக செய்வது கடினம். ஜனாதிபதி கிராம குழுக்களை அமைத்துள்ளார். அந்த குழுக்களில் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உள்ளன. அவற்றுடன் பொது சுகாதார பரிசோதகரை இணைக்கவும். அப்போது இந்த டெங்கு கட்டுப்பாட்டு பணியை நாம் செய்வது இலகுவாக இருக்கும். ஒரே ஒரு அதிகாரி தான் இந்த வேலையை செய்ய

வேண்டும் என்றால் அது கடினம். அதுபோல மக்களையும் தொடர்பு கொள்ளுங்கள். மக்கள் பங்கேற்காமல் வேலை செய்யும் போது, குற்றச்சாட்டுகள் வரும்.

மேலும், கொரோனா வைரஸ் திட்டம் குறித்து ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. சமூக வலைதளங்களில் வெளியிடுவதைப் பார்த்து நாமும் பயப்படுகிறோம். இதைப் பற்றி மருத்துவர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். போராட்டம் தொடங்கும் முன்பே இது போன்ற கதைகள் பேசப்பட்டது. இது மக்களை ஒன்று திரட்டுவதற்காக செய்யப்படுகிறது. இதன் பின்னணியில் தொழிற்சங்கங்களும் உள்ளன. எனவே, பொலிசார் இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், இந்த சுகாதார நிலைகள் குறித்து, நாட்டின் சுகாதார துறைக்கு தெரியப்படுத்துங்கள். இல்லையெனில், மக்கள் அச்சமடையாத பிரச்சினைகள் ஏற்படும்.

மாகாண சபையின் சில அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்பதில்லை. இதில் சரியான தகவல் தெரியாத, பொறுப்பேற்க முடியாத அதிகாரிகள் பங்கேற்பதால் எந்த பயனும் இல்லை. இதுபோன்ற அதிகாரிகள் குறித்து ஆளுநர் முடிவு எடுப்பார். ஆசிரியர் துறையில் பல பிரச்சினைகள் உள்ளன. மேல் மாகாணத்தில் ஏராளமான ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. அந்த வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமியுங்கள். அவர்கள் விருப்பத்துடன் பணிபுரிவார்கள். நிரந்தர நியமனம் வழங்கப்படும் போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஆளுநர் இங்கு இருப்பதால் அது தொடர்பில் தீர்மானம் எடுப்போம். இது குறித்து கல்வி அமைச்சரிடம் பேசுவேன். நான் மாகாண சபையில் இருந்த போது அவ்வாறே செயற்பட்டேன்.

சில வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் இல்லாமல் பேரூந்து ஓட்டுவதாக முறைப்பாடுகள் வருகின்றன. ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் இல்லாமல் பேரூந்துகள் ஓட முடியாது. அப்படி ஓடும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் தி எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சஹன் பிரதீப் விதான, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கம்பஹா மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாடிகோரள, பாதுகாப்பு பிரதானிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன