அதர்வா வெளியிட்ட ‘யோலோ’ படத்தின் முதல் பாடல்

புதுமுக நடிகர் தேவ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘யோலோ’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஐ அம் ஃபிரம் உளுந்தூர்பேட்டை’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் நட்சத்திர நடிகரான அதர்வா அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அத்துடன் படக்குழுவினர் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இப்பாடலுக்கான காணொளி மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.