அட்டாளைச்சேனை நீர் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திக்கு மேல் மாதாந்த நீர் பாவனை கட்டண நிலுவையை செலுத்தாத நீர் பாவனையாளர்களின் இணைப்புக்கள் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய அதிகார எல்லைக்குட்பட்ட அக்கரைப்பற்று, கல்முனை, மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை, ஆலையடிவேம்பு,பொத்துவில், கல்முனை ஆகிய பிரதேசங்களில் ஆறு மாதங்களாக மாதாந்த நீர்ப் பாவனை கட்டணம் செலுத்தப்படாமலுள்ளதாகவும், பாவனையாளர்களுக்கு நீர் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் யூ.கே.எம். முஸாஜித் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன