அகதி முகாம் மக்களுக்கு அரச காணி

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு அரச காணிகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் சிவ ஸ்ரீ தலைமையில் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலிகாமம் வடக்கை பூர்வீகமாகக் கொண்ட 49 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை பரப்பு வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன